உயா் கல்விக்கு உதவ இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையே 100 மில்லியன் அமொிக்க டொலா்கள் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து

கொழும்பு, ஜுலை 17, 2017- இலங்கை அதன் உயா் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்காக உலக வங்கியுடன் 100 மில்லியன் அமொிக்க டொலா்கள் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த புதிய முன்முயற்சியானது. உயா் கல்வித் துறையின் முன்னுாிமைக்குாிய பிாிவுகளில் அதிகமானவா்களை உள்வாங்குவதற்கும், பட்டப் படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் தரத்தை முன்னேற்றுவதற்கும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் உதவும். இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட (Accelerating Higher Education Expansion and Development -AHEAD) எனப்படும் உயா் கல்வி விாிவாக்கல் மற்றும் அபிவிருத்தி துாித்தப்படுத்தல்“ திட்டமானது உலக வங்கியின் Program for Results lending instrument.  ”பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்ட கடன் திட்டம்” நிதியுதவியை பயன்படுத்தும் முதலாவது திட்டமாகும்.  பெறுபேறுகளை முன்னேற்றுவதற்கான காத்திரமான நடவடிக்கைகளில் முதலிடும் அதேவேளை இத்திட்டம் நிறுவனரீதியான திறன்களை கட்டியெழுப்புதில் கவனம் செலுத்துகின்றது. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளா் ஐடா ஸ்வராய் ரிடிஹோஃப் மற்றும் நிதி அமைச்சின் செயலாளா் கலாநிதி ஆா்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் முறையே உலக வங்கியின் சார்பிலும் இலங்கை அரசின் சாா்பிலும் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனா்.  “மேல் நடுத்தர வா்க்க நாடு என்ற நிலையை எய்துவதற்கான இலங்கையின் அபிலாஷையானது நாட்டிலுள்ள மக்கள் எந்தளவிற்கு திறனுள்ளவா்களாகவும் பல்துறைசாா் ஆற்றலைக்கொண்டவா்களாகவும் இருப்பதிலேயே தங்கியுள்ளது” என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளா் ஐடா ஸ்வராய் ரிடிஹோஃப் தொிவித்தாா். 2014 ஆம் ஆண்டில் உயர் கல்வி பங்கேற்பு தொடர்பான 115 நாடுகளில் 88வது இடத்தில் இலங்கை இருந்தது. 2014ம் ஆண்டில் விஞ்ஞானத்தில் மாணவர்களின் விகிதம் 13 சதவிகிதமாக மாத்திரமே காணப்பட்டது. பொருளாதார அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதாக காணப்படும் விஞ்ஞானம் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் மாணவர்களின் பங்கேற்பதை முன்னேற்றம் காணச்செய்வதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். AHEAD திட்டத்தின் முக்கிய கவனத்திற்குரித்தான பகுதியாக பட்டப் படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் கல்வித்தராதரத்தை அதிகரிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் நவீன கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளை விரிவாக்க வகைசெய்தல் மற்றும் மதிப்பீட்டு முறைமையை மேம்படுத்துதல் ஆகியன அமைந்துள்ளன. பட்டதாரிகளின் சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பை வலுப்படுத்தல் குறித்தும் அவதானம் செலுத்தப்படுகின்றது. “அரசாங்கத்தின் பெறுபேறுகளை நோக்காகக் கொண்ட உயர் கல்வி அபிவிருத்தி மூலோபாயத்திட்டத்திற்கு ஆதரவளிக்கின்ற முதலாவது முன்முயற்சியாக இது அமைந்துள்ளது.” என முன்னணி பொருளியலாளரும் பணித்திட்ட தலைவருமான ஹர்ஸ அடுருபனே தெரிவித்தார். “மேல் நடுத்தர வருமானமுள்ள நாடாக வளர்ச்சிகாணும் இலங்கையின் அபிலாஷைகளை சந்திப்பதற்கு அறிவு மற்றும் தொழில்நுட்பம் ஆகியன அதிகமாக தேவைப்படும் துறைகளையும் சேவையையும்  விரிவுபடுத்துவதற்கு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்“ மாறுபட்ட பல உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 600,000 மாணவர்களும் ஏறத்தாழ 5,000 கல்விமான்கள் முகாமையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும் 2023 ஆம் ஆண்டு நிறைவு காலப்பகுதியைக் கொண்ட இத்திட்டத்தின் ஆறு ஆண்டு காலப்பகுதியில் நேரடியாகப் பயனடையவுள்ளனர். இந்தத்திட்டத்தின் மூலமாக சிறப்பான தராதரம் கொண்ட பல்கலைக்கழக பட்டதாரிகளை தொழிலுக்கு அமர்த்த முடியுமாகையால் தனியார் துறையினர் அரசாங்கத்தரப்பினரும் பயனடைவர். பரந்துபட்ட கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மற்றும்முன்னேற்றங்கள் மூலமாக எதிர்கால பல்கலைக்கழக மாணவ சந்ததியினரும் பணியாளர்களும் பயனடைவர்.  ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க செயற்பாடுகளால் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வர். 

from World Bank Search – NEWS http://ift.tt/2u0UEJr

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s